திருப்பதியில் ஊரடங்கு.. திருவிழாக்கள் ரத்து
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து திருப்பதியில் நாளை மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக நாளை முதல் மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும் என திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட டாஸ்க்போர்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து மண்டலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 2 வது அலை வேகமாக பரவுவதால் புகழ்பெற்ற திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது