திருப்பதியில் உஞ்சவிருத்தி செய்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்

india thirupathi
By Irumporai May 17, 2021 05:13 PM GMT
Report

திருப்பதி மலையில் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து மறைந்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள். கணக்கிடும் பணியில் தேவஸ்தான அதிகாரிகள் தீவிரம். தமிழ்நாட்டை சேர்ந்தவரான சீனிவாசன் திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன் கடந்த பல ஆண்டுகளாக உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வந்தார்.

[0T46VEG ]

கோவிலுக்கு வெளியே நடைபெறும் இறை கைங்கரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் தாமாக முன் சென்று உதவிகளை செய்வது வழக்கம். எனவே திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் அவர் ஏழுமலையான் கோவிலில் வேலை செய்யும் அர்ச்சகர் என்று கருதி வந்தனர்.


காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் கைங்கர்ய காரியங்களில் அவர் செய்து வந்த உதவிகளுக்கு தான விஜிலன்ஸ் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தடை விதித்தனர்.

ஆனாலும் அவர் தொடர்ந்து ஏழுமலையான் கோவில் முன் உஞ்சவிருத்தியில் ஈடுபட்டுவந்தார். இதனால் அவர் மீது திருமலை போலீசார் பலமுறை வழக்குகளை தொடர்ந்தனர். குடும்பம்,குழந்தைகள் ஏதும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்த அவர் திருமலையில் வசித்த வீட்டை மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் தேவஸ்தான நிர்வாகம் கையகப்படுத்தியது.

திருப்பதியில் உஞ்சவிருத்தி செய்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் அப்போது அவருக்கு திருப்பதியில் வீடு ஒன்றை தேவஸ்தானம் வாடகை அடிப்படையில் அனைவருக்கும் வழங்கியது போல் வழங்கியது.

திருப்பதியில் உஞ்சவிருத்தி செய்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் | Thirupathi Cash House Search

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீனிவாசன் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். எனவே அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை கையகப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் இன்று சென்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு நான்கு இரும்பு பெட்டிகள் உட்பட பல்வேறு பொருட்கள் இருந்தன. இரும்பு பெட்டிகளை திறந்து பார்த்தபோது அவற்றில் கட்டுக்கட்டாக  இருந்த பணத்தை கைபற்றினர்.