திருப்பரங்குன்றத்தில் முதல் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற அதிமுக வேட்பாளர்
திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் முதல் வாக்காளர்கள்மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற பதாகைகளுடன் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வரும் முதல் வாக்காளர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள கல்விக் கடன் ரத்து, இலவச டேட்டா உள்ளிட்ட திட்டங்களை வரவேற்கும் விதமாக வருகிற தேர்தலில் அதிமுக அரசு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக 200க்கும் மேற்பட்டோர் முதல் வாக்காளர்கள் அதிமுக எங்கள் சொத்து என்ற பதாகைகளுடன் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி வி. ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் அமமுக, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட 150 பேர் திருப்பரங்குன்றம் காரியாலயத்தில் விவி. ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.