திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் ஒரு பார்வை
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி,தோல்வி பெற்ற வேட்பாளர்கள் பற்றிய ஒரு அலசல்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போ போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 24 பேர் . பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் 5 பேர் .பதிவு பெற்று அங்கீகாரமற்ற கட்சிகள் 4 என மொத்தம் 9 அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 24 பேர் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரத்து 195 பேர்.
இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 2 லட்சத்து 33 ஆயிரத்து 650 வாக்குகள் பதிவாகின .
இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 473 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 132 பேர் (இதர வாக்காளர்கள் ) மூன்றாம் பாலினம் 4 பேர் என மொத்தம் பதிவான வாக்கு சதவீதம் 72 . 23 % சதவீத வாக்குகள் பதிவாகின.
பதிவான வாக்குகள் 2 லட்சத்து 33 ஆயிரத்து 650 வாக்குகளில் பதிவான 25. 80தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா - 624, 1162 பொன்னுத்தாய் பெற்றனர்.
அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா 1 லட்சத்து 03,683 வாக்குகளும் திமுக கூட்டணி சார்பில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுதாய் 74 194 வாக்குகளும் பெற்றார்.
இதில் 29489 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வெற்றி பெற்றார்.