திருமுல்லைவாயில் வாக்குபதிவு எந்திரம் கோளாறு- வாக்குப்பதிவு நிறுத்தம்- மக்கள் அவதி
சென்னை திருமுல்லைவாயில் அருகே வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாக 1 மணி நேரமாக வாக்கு பதிவு நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தமிழக சட்ட மன்ற தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை திருமுல்லைவாயல் ஜோதி நகர் பகுதியில் உள்ள 116வது வாக்கு சாவடியில் வாக்குபதிவு எந்திரம் பேட்டரி கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குபதிவு எந்திரம் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த ஒரு மணி நேரமாக பொது மக்கள் வரிசையில் காத்து கொண்டிருக்கின்றனர். எந்திரத்தை சரி செய்வதற்காக மாற்று பேட்டரி கொண்டு வந்த நிலையில் மீண்டும் இயந்திரத்தில் கோளாறு நீடிப்பதால்
இயந்திரத்தை சரிசெய்ய பெல் நிறுவன ஊழியர்கள் மொத்த யூனிட்டும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இருந்தவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.