திருமாவளவனுக்கு வந்த சோதனை.. தாங்கி பிடித்து இழுத்துச் சென்ற தொண்டர்கள்

thirumavalavan viralvideo விசிக திருமாவளவன்
By Petchi Avudaiappan Nov 29, 2021 04:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தேங்கிய மழைநீர் காரணமாக ஒவ்வொரு நாற்காலியிலும் கால் வைத்து தாண்டி செல்லும் விசிக தலைவர் திருமாவளவனின்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னை முதல் குமரி வரை பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் சில இடங்களில் மழை மிகவும் அதிகமாக பெய்து வருகிறது. 

சென்னையை பொறுத்தமட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே மழை வெள்ளநீரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியின் முதலாவது அவென்யூவில் திருமாவளவன் வசித்து வருகிறார்.

இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அவசர அவசரமாக சென்னை ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டார்.வழக்கம்போல் டிரஸ் அணிந்து, காலில் ஷூ போட்டுக் கொண்டு ரெடியாகி, மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். 

அப்போதுதான் சுமார் 2 அடி உயரத்துக்கு அந்த குடியிருப்பு பகுதியே வெள்ள நீரால் சூழ்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  ஷூவுடன் அந்த நீரில் நடந்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.இதனை பார்த்த அங்கிருந்த தொண்டர்கள், நாங்கள் தூக்கி செல்கிறோம் என்று சொல்லி உள்ளனர்.

ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் திருமாளவன்.அதனால், அங்கு போடப்பட்டிருந்த இரும்பு நாற்காலிகளின் மீது ஏறி கார் நிற்கும் இடத்துக்கு சென்றுவிடலாம் என்று நினைத்தார். அதன்படி, நாற்காலி மீது திருமாளவன் ஏறிக்கொள்ள, அவரை தொண்டர்கள் ஒருபக்கம் தாங்கி கொள்ள, தாண்டி தாண்டி சென்றார். ஒவ்வொரு நாற்காலியாக தாண்டி வந்து, கார் நின்றிருந்த பகுதிக்கு வந்துவிட்டார்.

இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பலரும் இதனை விமர்சித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.