அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் யுக்தி.. பாஜக நடத்திய போராட்டம் - திருமாவளவன் வரவேற்பு!
பாஜகவின் மதுக்கடை முற்றுகை போராட்டத்துக்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பாஜக
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி, இந்த மாதம் கடைசியில் இலங்கை செல்ல உள்ளார்.
அப்போது மிழக மீனவர்கள் பிரச்சினை குறித்துப் பேசவேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்த உள்ளோம் என்று தெரிவித்தார். அப்போது பாஜகவின் மதுக்கடை முற்றுகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர்,’’ மதுபானம் முழுவதுமாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும்.
வரவேற்பு
மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அந்தவகையில் பாஜகவின் இந்த போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரம், அரசியல் காரணங்களுக்காக, அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கும் யுக்தியாக பாஜகவினர் இதை கையாண்டால், அவர்களால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.
மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் பாஜகவினர் மது ஒழிப்பை முன்னிறுத்தினால், அதை நாம் முழுமனதோடு வரவேற்கலாம். பாராட்டலாம் என்று தெரிவித்தார்.