திருமாவளவன் பயன்படுத்தியது சினிமா படப்பிடிப்பு வாடகை கார்- விசிக விளக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், டி.என். 07 சி.எம். 2031 என்ற பதிவு எண் கொண்ட காரில் சென்றதாகக் கூறப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
கோட் சூட் அணிந்து திருமாவளவன் காரில் செல்லும் புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.
இந்நிலையில், அந்த கார் திருமாவளவன் பயன்படுத்தும் சொந்த கார் அல்ல என்றும், சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட கார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெளியிட்ட அறிக்கை
ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் "திருமா 35 - சமூக நீதியின் சகாப்தம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பூந்தமல்லி ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பின் ஒரு பகுதியாக கூரை திறக்கப்பட்ட வாகனத்தில் திருமாவளவன் வரும்போது எடுக்கப்பட்டது அந்த படம்.
படப்பிடிப்பு தளத்தில் படம் பிடிக்கப்பட்ட அந்த வாகன எண் குறித்து வன்மத்தை நெஞ்சில் நிறுத்தி மலிவு அரசியல் மனநிலையோடு காழ்ப்புணர்ச்சியை கக்குகின்றனர். அவரை வைத்து படம் பிடிக்கப்பட்ட அந்த விலை உயர்ந்த கார் படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்படுவதாகும்.
"ஆளும் கட்சியாக வி.சி.க." என்கிற எதிர்கால திசைப்புள்ளியை வெளிப்படுத்த படப்பிடிப்பு குழுவினர் டி.என்.07 சி.எம். 2031 என வாகன எண் வடிவமைத்து இருந்தனர்.
படப்பிடிப்பில் இடம்பெறும் காட்சிகள் பயன்படுத்திய காரின் ரகம், அதனுடைய எண் ஆகியவை குறித்து திருமாவளவனுக்கு தெரியாது. நிகழ்ச்சி நடத்திய குழுவே அதனை இறுதி செய்தது. இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் புலம்புகின்றனர். திருமாவளவன் சி.எம்.என பதித்த காரில் வருவதையே தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்கம்போல் அவதூறு பரப்புகின்றனர்.
இன்று தீர்மானித்தது போல் நாளைய தமிழகத்தின் அரசியல் திசை வழியை மக்கள் தீர்மானிக்கும். அதை உளப்பூர்வமாக உள்வாங்குவது தான் திருமாவளவன். காலத்தின் தீர்ப்பை பெருமகிழ்ச்சியோடு வரவேற்று சிறுத்தைகள் காத்திருப்போமே தவிர எரிச்சலோடு வெறுப்பு அரசியலில் வெந்து போபவர்கள் அல்ல. எனவே தமிழின மேம்பாட்டின் மீதும் சமூக நீதியின் மீதும் அக்கறை கொண்டுள்ள அனைவரும் இத்தகைய கொடும் சிந்தனையாளர்களை கண்டிப்போம்'' என்று அதில் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil