ஆதரவு கேட்டார் விஜய் : விசிக நிலைப்பாடு குறித்து திருமாவளவன் பேட்டி
தமிழக வெற்றிக்கழத்தின் தரப்பிலிருந்து ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், நாளை விசிக முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் இது குறித்த நிலைப்பாட்டை எடுப்போம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், பேசுகையில்,

த.வெ.க. தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை விசிக முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் இது குறித்த நிலைப்பாட்டை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அந்தக் கட்சியின் தனிப்பட்ட சுதந்திரம். அதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை.
இது குறித்து இவர் மேலும் தெரிவிக்கையில்,
இடதுசாரி கட்சிகளுடன் நீண்ட காலமாக கருத்தியல் அளவில் ஒருங்கிணைந்து பல்வேறு தளங்களில் கைகொடுத்து நின்று இருக்கிறோம். அவர்களிடமும் இது குறித்து முடிவெடுக்கிறார்கள் என்பதை பார்க்கிறோம்.
எட்டாம் திகதி இடதுசாரி கட்சிகளின் கூட்டம் இருக்கிறது. அவர்கள் முடிவு எதுவாக இருந்தாலும் எங்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முடிவு முக்கியமானது.
எங்கள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் கருத்தின் அடிப்படையில் முடிவெடுப்போம். அதிமுக, பாமக என யாராவது ஆதரவு தெரிவித்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் த.வெ.க. இருப்பதாக தெரியவில்லை.
அவ்வாறு அவர்கள் நினைக்கவில்லை. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள். முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
எனவே, அப்படி பா.ம.க. என யாராவது ஆதரவு கொடுத்தாலும் த.வெ.க. ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியாது. அவர்களின் முயற்சி அது அல்ல. கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதற்காக காத்திருக்கிறார்கள் என்றபோது அந்த அணியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.