அதிகாரத்தில் பங்கு.. இதென்ன ஆஃபரா? அதில் அவ்வளவு அவசரம் - திருமாவளவன் காட்டம் !

Vijay Thol. Thirumavalavan Tamil nadu
By Swetha Oct 29, 2024 02:12 AM GMT
Report

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கட்சி தலைவர் விஜய் கூறியது குறித்து திருமாவளவன் பேசியுள்ளார்

திருமாவளவன் 

தமிழக அரசியலில் ஆளும் கட்சி தங்களது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும் என்ற விஷயம் கடந்த சில வாரங்களாக பேசுபொருளாக இருக்கிறது.

அதிகாரத்தில் பங்கு.. இதென்ன ஆஃபரா? அதில் அவ்வளவு அவசரம் - திருமாவளவன் காட்டம் ! | Thirumavalavan Slams Vijay Speech In Conferrrence

குறிப்பாக திமுக - விசிக இடையிலான உரசலாக பார்க்கின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று இருகட்சிகளின் மேல்மட்ட தலைவர்களும் தெளிவுபடுத்தினர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தங்களது முதல் மாநில மாநாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க தயார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், 'முதல் அடி மாநாடு! அடுத்த அடி ஆட்சிப் பீடம்! ' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது.

அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துகள். பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம்.

ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம்.இது என்னவகை நிலைப்பாடு? "

லாஜிக்கே இல்லை.. பாஜக எதை எதிர்ப்பார்கிறதோ அதைத்தான் சீமான் செய்கிறார் - திருமாவளவன்!

லாஜிக்கே இல்லை.. பாஜக எதை எதிர்ப்பார்கிறதோ அதைத்தான் சீமான் செய்கிறார் - திருமாவளவன்!

காட்டம் 

கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு" என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார்.

அதிகாரத்தில் பங்கு.. இதென்ன ஆஃபரா? அதில் அவ்வளவு அவசரம் - திருமாவளவன் காட்டம் ! | Thirumavalavan Slams Vijay Speech In Conferrrence

இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை.

அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை. அவரது உரையில் வெளிப்படும் "அதிகார வேட்கையும் அடையாள அரசியலும்" பழைய சரக்குகளே! குடும்ப அரசியல் எதிர்ப்பு ,

ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே!ஆக்கப்பூர்வமான- புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை.

"பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. 'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.