என் அக்கா இறந்த பிறகுதான் கிறிஸ்துவர் என்பது எனக்கு தெரியவந்தது - திருமாவளவன்
என்னை கிறிஸ்துவர் என்று விமர்சித்து கொண்டு வருகிறார்கள். உண்மையில் என் அக்கா கிறிஸ்துவர் என்பது எனக்கு தெரியாது. அவர் இறந்த பிறகுதான் எனக்கே தெரியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த 6 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறது விசிக. புதுச்சேரியில் போட்டியிடும் ஒரு தொகுதிக்கும் பானை சின்னம் கிடைத்துவிட்டது. இதுவே விசிகவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதும் திருமா, தனது வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளில் மட்டுமல்லாது, திமுக கூட்டணியினருக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆயிரம் விளக்கு, எழும்பூர், துறைமுகம், திரு.வி.க.நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் திருமாவளவன். அப்போது பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், திருவள்ளுவருக்கு பூணூல் போட்ட படம்தான் தொடக்க காலங்களில் இருந்தது.
பூணூலை தூக்கி ஏறிந்துவிட்டு புது வடிவம் தந்தவர் கருணாநிதி.
ஆனால், பாஜகவினர் மீண்டும் திருவள்ளுவருக்கு காவி அடித்து பூணுல் போடுகிறார்கள். கிறிஸ்துவர் என்று என்னை விமர்சிக்கிறார்கள். உண்மையில் என் அக்கா இறந்தபிறகுதான் அவர் கிறிஸ்தவர் என்பதே எனக்கே தெரியும் என்று பேசினார்.