தவெக தலைமையிலான கூட்டணியில் விசிக - திருமாவளவன்
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம் பெறும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தவெக கூட்டணியில் விசிக
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க பெரும்பான்மை தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்து ஆட்சியில் பங்கு பெற்றுள்ளன.

இதனையடுத்து, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்துள்ளன.
சமீபத்தில் விஜய் தலைமையிலான தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து விலகினாலும், தவெக ஆட்சியமைக்க ஆதரவளிக்கிறோம், கூட்டணியில் இணையவில்லை என அறிவித்துளன.
இந்நிலையில் கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என அக்கட்சியே அறிவித்து விட்டது.

ஆனால் நான் அந்த முடிவை எடுக்கவில்லை. ஒருவேளை தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம் பெறும்” என தெரிவித்துள்ளார்.