தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும் - திருமாவளவன் பேச்சு
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும் என விசிக சார்பில் நடைபெற்ற தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
விசிக ஆளும் கட்சியாக வளர வேண்டும்
விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளான இன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் விசிக சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது.
திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய், மாநாடு வெற்றியடையவும் வாழ்த்து தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் திருமாவளவன் மாநாடு மேடைக்கு வருகை தந்தார்.
இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் அசைக்க முடியாத அரசியல் சக்தி என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். இனி வரும் காலத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆளும் கட்சியாக வளர வேண்டும்.
இத்தனை காலம் ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்தோம். இன்றைக்கு ஆளும் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். விடுதலை சிறுத்தைகளும், தமிழக வெற்றிக்கழகமும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்" என பேசியுள்ளார்.
திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் தொண்டர்கள் ஏறியதால் விரைந்து தனது உரையை முடித்துக்கொண்டார்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil