விஜய் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை - திருமாவளவன் விளக்கம்
திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி வலிமை பெற வாய்ப்பில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளம் வாயிலாக தொண்டர்களுடன் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த உயைில் அவர் மேலும் தெரிவிக்கையில், திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பல கட்சிகள் போட்டி போட்டு பிரிப்பதாகக் கூறினார்.

கூட்டணிக் கட்சியினர் போட்டியிட்ட ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட வீடியோ பதிவில்,
“தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று கருத்து இல்லை. அதற்கு காரணம் கூட்டணி பலம் முதன்மையானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சீர்குலைக்க கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு முயற்சிகளை பலரும் எடுத்தனர்.
அவர்களின் டார்க்கெட் விசிகதான். எப்படியாவது திருமாவளவனை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என, என்னை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த நினைத்தனர். என் மூலமாக திமுக கூட்டணியை பலவீனப்படுத்த திட்டமிட்டனர்.
பல விதத்தில் ஆசைகாட்டி இக்கூட்டணியை சிதைக்க முயற்சி செய்தனர். ஆனால் பொறுமை காத்து, தொலைநோக்கு பார்வையோடு திமுக கூட்டணியில் இருக்கிறோம். வேறு எந்த முதன்மையான காரணமும் இல்லை" என்று விளக்கமளித்தார்.