கொளத்தூர் வேண்டாம் என ஸ்டாலினிடம் அப்போதே சொன்னேன் - திருமாவளவன்
thirumavalavan says i warned stalin about kolathur: கொளத்தூர் வேண்டாம் என ஸ்டாலினிடம் அப்போதே சொன்னேன் என திருமாவளவன் பேசியுள்ளார்.
கொளத்தூர் வேண்டாம் என சொன்னேன்
SIR முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென, சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கொளத்தூர் வேண்டாம் என ஸ்டாலினிடம் அப்போதே சொன்னேன் என கூறியுள்ளார்.

இதில் பேசிய அவர், "கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெறுவது கடினம், முதல்வர் வெற்றிபெறக்கூடாது என சதி நடக்கிறது என எனக்கு ஒரு பெண்மணி போனில் தெரிவித்தார். நான் அதை முதலில் அலட்சியம் செய்தேன்.
பின்னர், மீண்டும் மீண்டும் அவர் என்னிடம் கூறிய பின்னர் சேகர்பாபுவிடம் அவருக்கு தொடர்பு ஏற்படுத்தி பேச செய்தேன்.
அதன்பின்னர் நானே ஒரு முறை சந்தர்ப்பம் கிடைத்த போது, மு.க.ஸ்டாலினிடம் அண்ணே கொளத்தூரில் உங்களுக்கு எதிராக சதி நடக்கிறது. நீங்கள் ஏன் வேறு தொகுதியில் நிற்க கூடாது?" என கேட்டேன்.
BLO எல்லாம் போட்டு எல்லாம் சரியாக நடக்கிறது. முழுமையாக ஆய்வு செய்துவிட்டேன். எந்த பிரச்சினையும் இல்லை என சேகர்பாபு தெரிவித்தார்.
அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தன்னியல்பாக தோற்கடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என முன்பே சொன்னேன்.
இவர்கள் குறி வைக்கப்பட்டிருக்கிறார்கள். எஸ்ஐஆரை பயன்படுத்தி பாஜகவின் கொள்கை எதிரிகள் குறிவைத்து வீழ்த்தப்பட்டனர்” என்று பேசினார்.