தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளரா பிரதமர் மோடி? - கொந்தளித்த திருமாவளவன்

Thol. Thirumavalavan
By Irumporai May 07, 2023 09:45 AM GMT
Report

தி கேரளா ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளரா பிரதமர் மோடி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

 தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் தமிழ்நாடு மற்றும் கேரளா இரண்டு மாநிலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் தமிழகத்தில் இந்த படத்தை திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில் இந்த படம் குறித்து தொல் திருமாவளவன் கூறி இருப்பதாவது: 

தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளரா பிரதமர் மோடி? - கொந்தளித்த திருமாவளவன் | Thirumavalavan Says About The Kerala Story

திருமாவளவன் கேள்வி

தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது. இதனை பிரதமர் மோடி அவர்கள் ஆதரிப்பது, அவர் அப்படத்தின் தயாரிப்பாளரா அல்லது இயக்குநரா என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படத்தைத் திரையிடுவதற்கு தமிழ்நாட்டில் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்படத்தைத் திரையிட தொடர்ந்து அனுமதிப்பது தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்க வழிவகுத்து விடும். எனவே, உடனே இதற்கு தடை விதிக்க வேண்டுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.