ஆணவக்கொலை குற்றமில்லையா? நடிகர் ரஞ்சித்தின் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!
ஆணவக்கொலை குற்றமில்லை என்பது அறியாமையை காட்டுவதாக ஆணவப்படுகொலை குறித்த நடிகர் ரஞ்சித்தின் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் ரஞ்சித்
தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதையை செலுத்தினார்.
பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆணவக்கொலை குற்றமில்லை என்பது அறியாமையை காட்டுவதாக ஆணவப்படுகொலை குறித்த நடிகர் ரஞ்சித்தின் பேச்சுக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது .
திருமாவளவன் பதிலடி
இதற்க்கு பதில் அளித்த அவர்,'' படம் எடுத்து லாபம் சம்பாதிக்க சிலர் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசி வருகின்றனர்;சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசுவது நாட்டிற்கு நல்லதல்ல; ஆணவக்கொலை குற்றமில்லை எனக்கூறுவது அறியாமையை காட்டுகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் மற்றும் பகுஜன் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது தலித் மக்களில் ஒருவர் 2026 ல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என குரல் எழுப்பட்டது குறித்த கேள்விக்கு ,
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வைத்து அரசியல் நகர்வுகளை நடத்த விசிகவுக்கு விருப்பமில்லை. நியமான நிதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.