நோபல் பரிசு விவகாரம்: வைகோ கருத்துக்கு நகைச்சுவையாக பதிலளித்த திருமாவளவன்

Tamil nadu Thiruvallur
By Vinoja Jul 09, 2026 09:03 AM GMT
Report

"திருமாவளவனின் கருத்துக்கு நோபல் பரிசு வழங்கலாம்" என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கருத்துக்கு, விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம், தவெக அமைச்சரவையில் இருந்தாலும் திமுகவுடன் நட்பு தொடரும் என்ற திருமாவளவனின் கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, "அது நோபல் பரிசு வழங்கப்பட வேண்டிய கருத்து" என்று தெரிவித்தார்.

நோபல் பரிசு விவகாரம்: வைகோ கருத்துக்கு நகைச்சுவையாக பதிலளித்த திருமாவளவன் | Thirumavalavan Reply On Nobel Prize Comment

திருமாவளவன் பதில்  

இதற்கு பதிலளித்த திருமாவளவன், அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியில் திமுகவும், தவெகவும் இடம்பெற வேண்டும் என்பதே எனது கருத்து.இது தனிப்பட்ட அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு கூறப்பட்டதல்ல" என்றார்.

மேலும், "எனது கருத்துக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று வைகோ கூறியுள்ளார்" என்ற கேள்விக்கு, "அவரின் பரிந்துரைக்கு நன்றி. நோபல் பரிசு கிடைத்தால் அவருக்கே நன்றி சொல்வேன்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.