ராமதாஸ் முகத்தை உற்றுப்பார்த்தால் மோடி தெரிவார்: திருமாவளவன் பேச்சு
ராமதாஸ் முகத்தை உற்றுப்பார்த்தால் மோடி தெரிவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய திருமாவளவன் பாமகவின் தொண்டர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். பாமகவுக்கு ஓட்டு போடுவதாக நினைத்து நீங்கள் மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட்டால் நீங்கள் ஏமாறுகிறீர்கள் என கூறிய திருமாவளவன்.

பாமக தற்போது பாஜகவாக மாறிவருவதாகவும் பாமகவுக்கு நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வலிமை தருமே தவிர உங்கள் கட்சிக்கும், உங்களுக்கும் வலிமை தராது என்றார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக தமிழகத்தில் மூன்று முகங்களாக களத்தில் இறங்கியுள்ளதாக கூறிய திருமா ராமதாஸ் முகத்தை உற்றுப்பாருங்கள் மோடி தெரிவார்.
பழனிசாமி முகத்தில் மோடி முகம் தெரியும் ஆகவே சிந்தித்து செயல்படுங்கள் என கூறியுள்ளார்