நான் இந்துக்களின் விரோதியா ... ? : திருமாவின் சிறப்பு பேட்டி
இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலானில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5 நாட்கள் நோன்பு வைக்கிறார். இந்த செய்தியினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயகப் பேரவை உறுதி செய்தது
இந்தாண்டு திருமாவளவன் 18-வது ஆண்டாக அவர் நோன்பு வைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. மத நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையில் திருமாவளவன் நோன்பை கடைபிடித்து வருகின்றார்.
அதே சமயம், திருமாவளவன் நோன்பு நோற்கும் நாட்களில் சென்னையில் உள்ள அபு பேலஸ் ஹோட்டலில் சஹர் (அதிகாலை உணவு) உட்கொள்வார். இந்த நிலையில் தான் நோன்பு இருப்பது குறித்து ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு திருமாவளவன் அளித்த சிறப்பு நேர்காணல் உங்களுக்காக