திருமாவளவன் சர்ச்சுகளின் ஏஜெண்ட் - பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கடும் தாக்கு

thirumavalavan christianagent
By Irumporai Nov 05, 2021 09:25 PM GMT
Report

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் தொல். திருமாவளவன், திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் என்ற நூலை சென்னையில் வெளியிட்டார்.

பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய அந்த நூல் குறித்து பேசியிருக்கும் திருமாவளவன், திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர். அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை எழுதியுள்ளார் என்கிற நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்கு உரியது என்று தெரிவித்துள்ளார்.

 மேலும், கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக திகழும் என்று தெரிவித்திருக்கிறார்

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘தனது ட்விட்டர் பதிவில்:

’சூப்பர்!’’என்று பதிவிட்டு, ‘’ திருமாவளவன் தலித் போர்வையில் அதன் லாபங்களை அனுபவித்து வரும் ஃமதம் மாற்றம் செய்யும் சர்ச்சுகளின் ஏஜெண்ட். இந்து பெயரில் திரியும் மதம் மாறிய கிறிஸ்தவர் நீங்கள். ஒப்புக்கொண்டால் எம்.பி. பதவி போய்விடும் என்பதலால் மௌனமா?’’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.