RSS ஊர்வலத்துக்கு தடைகோரி திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
RSS ஊர்வலத்திற்க்கு தடைகோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருமாவளவன் மனுத்தாக்கல்
சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கர் நுாற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி RSS இயக்கத்தைச் சேர்ந்த 9 நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வரும் 28ம் தேதிக்குள் பரிசீலித்து முடிவெடுக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு அனுமதிக்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்து வந்தார்.
இதனிடையே தமிழகத்தில் RSS அணிவகுப்பு ஊர்வலத்திற்க்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெறக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.