திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்- வாக்களித்த பின் திருமாவளவன் பேட்டி
அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது வாக்கை பதிவு செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, கேரளா, தமிழகம் என ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 6 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் காலை 7 மணி முதல் 9 மணிநேர நிலவரப்படி அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தமிழகத்தில் குறைந்த பட்சமாக நெல்லை மாவட்டத்தில் 9.98 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. சென்னையில் காலை 9 மணி நிலவரப்படி 10.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்பு அவர் நிருபர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது. திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்” என்றார்.