விவேக் மரணத்தில் அரசியல் செய்கிறார்கள்!

thirumavalavan vivek death rip vivek lmurugan
By Fathima Apr 18, 2021 01:32 PM GMT
Report

நடிகர் விவேக் மரணத்தில் தொல்.திருமாவளவன் அரசியல் செய்வதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரின் பல்லடத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால், பொதுமக்கள் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

விவேக் மரணம் பற்றி பேசுகையில், சமூக சிந்தனையாளரான விவேக்கின் இழப்பு தமிழ்நாட்டுக்கே பேரிழப்பு என்றும், அவரது மரணத்தை வைத்து திருமாவளவன் அரசியல் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறிய எல்.முருகன், பொய் பிரச்சாரங்கள் செய்ய வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை, தொழில் பேட்டை மற்றும் மகளிர் கலை கல்லூரி அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.