தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்! தொல். திருமாவளவன் ஆவேசம்
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வெளிநடப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் தொல்.திருமாவளவன். செய்யூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் பனையூர் பாவுவை ஆதரித்து தொல்.திருமாவளவன் அவர்கள் நேற்று மாலை பிரசாரம் செய்தார்.
அப்போது பேசுகையில், இலங்கையின் ராஜபக்ச அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலின் சர்வதேச குற்ற புலனாய்வு விசாரணை நடத்துவதற்கு ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் மற்றும் தீர்மானத்திற்கு எதிராக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் இருக்கின்றன, இந்தியா வெளிநடப்பு செய்துள்ளது, உண்மையிலேயே தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இந்தியா வெளிநடப்பு செய்திருக்கிறது, தமிழர்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்ய வேண்டுமென்றால் ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும். ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக வெளிநடப்பு செய்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.