திமுக எடுத்திருக்கும் முடிவு தேசத்திற்கு ஆபத்து - திருமாவளவன்

M K Stalin Thol. Thirumavalavan DMK
By Karthikraja Nov 28, 2026 09:14 AM GMT
Report

thirumavalavan criticize dmk supports delimitation bill: தொகுதி மறு​வரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவளிப்பது தேசத்திற்கு ஆபத்து என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறு​வரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி டிசம்​பர் 3 ஆம் தேதி வரை நடை​பெற உள்​ள நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்டத் தொடரில், மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்பான மசோதாக்​கள் தாக்​கல் செய்​யப்​படும் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. 

திமுக எடுத்திருக்கும் முடிவு தேசத்திற்கு ஆபத்து - திருமாவளவன் | Thirumavalavan Criticize Dmk Support Delimitation

இந்நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.பிக்கள் குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் திமுக ஆதரவு.

கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது, 2024 ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!

1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் எதிர்ப்பு

திமுகவின் இந்த முடிவிற்கு விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

திமுக எடுத்திருக்கும் முடிவு தேசத்திற்கு ஆபத்து - திருமாவளவன் | Thirumavalavan Criticize Dmk Support Delimitation

திமுகவின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், "தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்து இருப்பது, திருப்பரங்குன்றம் தீர்ப்பை விட பேரதிர்ச்சி தருகிறது.

திமுக எடுத்திருக்கும் முடிவு ஒட்டுமொத்த தேசத்திற்கு ஆபத்து ஏற்படுத்துகின்ற நிலைப்பாடு. திமுக வரலாற்று பிழை செய்துள்ளது. பாஜகவின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே திமுக வழிவகுக்கிறது. பாஜகவின் சதி சதி திட்டத்திற்கு திமுக துணை போவது போல் உள்ளது" என கூறியுள்ளார்.