பா.ம.க சாதிய வன்கொடுமையை கூர்நோக்குவதில் குறியாக உள்ளது: விசிக கட்சி தலைவர் திருமாவளவன்
பிரதமரிம் நேற்றைய உரை பொதுமக்களுக்கு அலங்கார உரையாக தான் இருந்தது என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் விசிக தலைவரும் எம்பி யுமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், அரக்கோணத்தில் இரட்டை சாதிவெறியர்களால் நடத்தப்பட்டது எனவும் அந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய படுகொலை அதிகம் நடப்பதாக கூறிய திருமாவளவன்,பாமக கட்சி சாதிய வன்கொடுமையைகூர்நோக்குவதில் குறியாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
அதே சமயம் இந்தியாவில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இதற்கு பிரதமர் பொறுப்பு ஏற்கவேண்டும் என கூறிய திருமாவளவன் . பிரதமரின் நேற்றைய உரை பொதுமக்களுக்கு அலங்கார உரையாக தான் இருந்தது எனவும், போர்க்கால அடிப்படையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருமாவளவன் கூறினார்.