''அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என பாஜக நினைக்கிறது'' -தொல்.திருமாவளவன்

dmk bjp aiadmk Thirumavalavan
By Jon Mar 28, 2021 01:47 PM GMT
Report

சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்ற பாஜக நினைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கூறியுள்ளார் சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைக்க வேண்டும் என கூறினார் மேலும், அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என பாஜக பார்க்கிறது.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லை என்ற நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது.

அதே போல்சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள் என கூறினார் அதிமுக, பாமக என யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் பாஜகதான் என கூறி, அதிமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என குறிப்பிட்டார்.