இது பெரியார் மண்ணில் வாலை ஆட்டினால் வால் நறுக்கப்படும் : திருமாவளவன் எச்சரிக்கை

Thol. Thirumavalavan ADMK BJP
By Irumporai Oct 09, 2022 03:46 AM GMT
Report

கோவை சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன் :

பா.ஜ.க.வை தனிமைபடுத்துவோம்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தனிமைபடுத்துவோம். இந்துக்களின் நம்பிக்கையை யாரும் கொச்சைபடுத்தவில்லை. இந்துக்களுக்கு எதிராக திசை திருப்பி வைப்பது மட்டுமின்றி எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.

அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை பயன்படுத்துகிறார்கள். இந்து மதத்தை காக்க நினைக்கும் மடாதிபதிகள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை அழைத்து செவில் மீது அறைய வேண்டும். ஆர்.எஸ்.எஸ், பிஜேபியும் மத வழி தேசியத்தை வடிவமைக்க முயற்சிக்கின்றனர். 

இது பெரியார் மண்ணில் வாலை ஆட்டினால் வால் நறுக்கப்படும் : திருமாவளவன் எச்சரிக்கை | Thirumavalavan Admk Stop Joining Hands With Bjp

மதமும், சாதியும் மறந்து விடுவதல்ல, வேரோடு அழித்து எரிய வேண்டும். சாதியும் மதமும் இல்லை என எப்படி சொல்ல முடிகிறது? காங்கிரஸ் கட்சியை தவிர்த்து எதிர்க்கட்சி அமைப்பது மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வழி வகுக்கும் என பணிவுடன் தெலுங்கானா முதல்வரிடம் கூறி வந்துள்ளேன்.

மோடி பாவம் எழுதி கொடுப்பதையும், சொல்லி கொடுப்பதையும் பேசுபவர். தமிழ்நாட்டை குறி வைத்து விட்டார்கள். அங்கு, அங்கு பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் இவர்கள் தான். ஆனால் குற்றத்தை பெரியார் அமைப்புகள் மீது போடுகிறார்கள்.

வால் நறுக்கப்படும்

54 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்கிறான். எதுக்கு விலைவாசி உயர்வை எதிர்த்தா? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவா? இவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் இந்துகளை யார் காப்பாற்றுவார்கள்? அப்பாவி இந்துக்களுக்காக தான் நாம் குரல் கொடுக்கிறோம்.

இது பெரியார் மண்ணில் வாலை ஆட்டினால் வால் நறுக்கப்படும் : திருமாவளவன் எச்சரிக்கை | Thirumavalavan Admk Stop Joining Hands With Bjp

தமிழ்நாட்டில் 200 பேர் தான் இருக்கிறார்கள். பெரியார் மண்ணில் வால் ஆட்டி வருகிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சரின் முன்னிலையில் சொல்கிறேன். வாலை சுற்றி வையுங்கள். இல்லாவிட்டால் வால் நறுக்கப்படும். அதிமுக பிஜேபியுடன் கைகோர்த்து போவதை கைவிடுங்கள்.

ஜெய் ஸ்ரீராம் சொல்லும் காலம் வந்துவிடும்

எம்.ஜி.ஆர் மீதும், மோடியா லேடியா சாவல் விட்ட ஜெயலலிதா மீதும் மதிப்பு வைத்தால் பாஜகவை கைவிட வேண்டும், நாளையே அறிக்கை விட வேண்டும். நாளை பா.ஜ.க.வில் ஒரு எம்பி வந்து விட்டால், அடுத்த 5 ஆண்டிகளில் ஜெய் அனுமான், ஜெய் ஸ்ரீராம் சொல்லும் காலம் வந்துவிடும் என கூறினார்.