துணை முதல்வர் பதவி நிபந்தனையா? - திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா!
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விசிக தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா ரகசியமாக சந்தித்திருப்பதாகவும் அதன் போது திருமாளவன் தரப்பில் இருந்து துணை முதல்வர் பதவிக்கான கோரிக்கை வைக்கப்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாகவே விசிக முடிவை அறிவிக்க தாமதம் செய்வதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.

108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டடு வருகின்றது.
அதற்கு ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு கோரினர்.அதற்கான கணொளிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.
ஆனால் விசிகவை தவெகவின் எந்த நிர்வாகியும் சந்தித்ததாக புகைப்படம் கூட வெளியில் வரவில்லை. ஆனால் நேற்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
இந்தச் சந்திப்பின் போது, விஜய்யின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு விசிக முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
குறித்த சந்திப்பின் போதே திருமாளவன் தரப்பில் இருந்து துணை முதல்வர் பதவிக்கான கோரிக்கை வைக்கப்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.