பழனிசாமி அவராக பேசவில்லை, பேச வைக்கின்றனர் - திருமா ஆவேசம்
எடப்பாடி பழனிசாமியை யாரோ பேச வைப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மறைந்த மு.க.முத்துவின் உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நேரில் அஞ்சலி செலுத்தினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 நாட்களாகியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
திருமா ஆவேசம்
குற்றவாளியை பிடிப்பதில் காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். இதற்காக சிறப்பான குழுக்கள் அமைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியை சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான கோரிக்கைகளை பற்றி பேசாமல், திமுக கூட்டணி கட்சிகளை அழைப்பதை பேசிவருகின்றனர். பழனிசாமி அவராக பேசவில்லை, யாரோ பேச வைக்கின்றனர்” என கூறியுள்ளார்.