அதிமுகவுடன் கூட்டணி சேரலாம்.. ஆனால் அந்த ஒரே பிரச்சனைதான் - திருமா வெளிப்படை
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் பிரச்சனை இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி?
திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
அப்போது சுமார் 20 நிமிடங்கள் திருமாவளவன் - வைகை செல்வன் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில், திருமாவளவன் மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
திருமா பேட்டி
அரசியலில் பொறுமை, நிதானம், தெளிவு மிகவும் முக்கியம். கொள்கை அடிப்படையில் நம் பகைவர்கள் யார் என்பதை தீர்மானிக்க ஒரு துணிவு இருக்க வேண்டும். விசிகவை பொறுத்தவரை கூட்டணி விவகாரத்தில் தெளிவாக உள்ளோம். எப்போதும் பாஜக மற்றும் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது.
இதனை முன்பே தெளிவுபடுத்திவிட்டோம். அதேபோல் தமிழ்நாட்டில் திமுக மட்டுமல்லாமல் அதிமுகவோடு சேர்வதற்கும் விசிகவுக்கு கதவுகள் திறந்து இருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அது முடியாது.
பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியிலோ, அணியிலோ விசிக இணையாது. இப்படி அனைத்து கதவுகளையும் மூடிவிட்டால், எப்படி கூட்டணி பேரம் பேசுவது என்று எல்லோரும் கேட்கிறார்கள். கூட்டணி பேரம் பேசுவதற்காக நாங்கள் கட்சியை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Viral video: 93 வயதில் முதியவர் மனைவிக்கு செய்த விஷயம்.. நெகிழ்ந்து கடைக்காரர் கொடுத்த பரிசு Manithan
