"தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்ப பெறவேண்டும்" திருமாவளவன் கோரிக்கை
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனே திரும்ப பெறவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்றும் இது குறித்து அவரே முடிவெடுப்பார் என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரித்தது.
இதனையடுத்து, 7 பேர் விடுதலை விவகாரத்தில், ஒரு வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலாளர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் குடியரசு தலைவருக்கே முழு அதிகாரம் உள்ளதாக தமிழக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக கூறிவந்த மத்திய அரசு, நீதிமன்ற விசாரணையின் போது தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்றது. இப்போது, பல்டி அடித்து தனக்கு அதிகாரம் இல்லை என்கிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முழு அதிகாரம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் கடந்த 28 மாதங்களாக காலம் தாழ்த்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு எத்துள்ளார். அவரது இந்த செயல், அதிகாரத்தை தட்டிக்கழிப்பதாகவே கருதப்படுகிறது. எனவே, கடமையை செய்ய தவறிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.