30 நிமிடங்களில் 134 வகை உணவுகள் சமைத்து சாதனைப் படைத்த பெண்
மதுரையில் 30 நிமிடங்களில் 134 வகை உணவுகள் சமைத்து பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விசாகபட்டினம் கப்பல் படையில் அதிகாரியாக உள்ள ரவிச்சந்திரன் என்பவரது மனைவி இந்திரா சிறு வயது முதலே சமையல் கலையில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக படுவேகமாக சமைக்கும் இவர் சமையலில் சாதனை செய்ய விரும்பியுள்ளார்.
அதன்படி சொந்த ஊரான திருமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்தியா புக் ஆப் ரிக்கார்ட் அமைப்புடன் இணைந்து சாதனை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். காலை 10.25 மணி முதல் 10.55 மணிக்குள் 30 நிமிடங்களில் 134 உணவு வகைகளை செய்து இந்திரா அசத்தினார்.
இதில் 15 வகையான இட்லி வகை, 10 வகை தோசை, 12 வகை பணியாரம், 5 வகை ஆம்லெட், மட்டன் - சிக்கன் பிரியாணி, பால், முந்திரி வகை பாயசம், 10க்கும் மேற்பட்ட ஜூஸ் வகை என 134 வகைகளில் பல்வேறு உணவுகளை அவர் சமைத்தார்.
30 நிமிடங்களில்அறுசுவை உணவு சமைத்து முடித்து ஆசிய அளவில் சாதனை படைத்த இந்திராவிற்கு சான்றிதழை இந்தியா புக் ஆப் ரிக்கார்ட் அமைப்பின் சென்னை மண்டல பொறுப்பாளர் விவேக் வழங்கினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.woma