திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை - யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை

thirumalaitirupatidevasthanam job oppurtunity
By Petchi Avudaiappan Dec 06, 2021 10:46 PM GMT
Report

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. \

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடப்பதாகவும், எவ்வளவு வேலை காலியாக உள்ளது என்றும் வேலைக்கு ஏற்ற சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 

இது, போலியானது என தெரிவித்துள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை நம்பி ஏமாற வேண்டாம். கடந்த காலங்களில், தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக சிலர் மோசடி செய்து, சில அப்பாவிகளிடம் இருந்து பணம் வசூலித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

அத்தகைய நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பு தொடர்பாக தேவஸ்தான இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். கடந்த காலங்களில் இதுபோன்ற விஷயங்களில் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளோம்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வேலை வாங்கி தருவதாக வெளியிடப்படும் போலி விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான பிரசாரத்தை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.