விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு
அதிமுக, தவெக கூட்டணி வாய்ப்புகள் குறித்து திருமாவளவன் பேசியுள்ளார்.
தவெக கூட்டணி
புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "பாமக, பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணியில் விசிக இடம்பெறாது. அதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.
பதவிதான் முக்கியம் என்றால் இப்படி பேசமுடியுமா? புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ஆனால் அது பாஜகவிற்கு சாதகமாக அமைந்து விடும் என்ற காரணத்தால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
நான் நினைத்து இருந்தால் விஜய் உடன் செல்வதற்கும் கதவு திறந்துள்ளது என்று கூறலாம். அந்தக் கதவையும் மூடினேன். பாஜக தலைமையிலான கூட்டணி கதவையும் மூடினேன்.
அதிமுக கூட்டணி
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் துணை முதல் அமைச்சர் பதவி கேட்கலாம், கூடுதலாக 3 அல்லது 4 அமைச்சர் பதவியையும் கேட்கலாம் என்று சிலர் ஆசை காட்டினார்கள். இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்தி விட முடியாது.
பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. நம்மை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிய பிறகு இதே முடிவை அதிமுக எடுத்திருந்தால் நாம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
பாஜகவை எதிர்க்கிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் நான் அம்பேத்கரின் மாணவன். நான் நினைத்து இருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் உங்கள் திருமாவளவன் அந்த முடிவை எடுக்க மாட்டான்" என பேசினார்.