தவெகவின் நம்பகத்தன்மையை பாதிக்கும் - திருமாவளவன் விடுத்த வேண்டுகோள்
யார் வந்தாலும் கட்சியில் இணைப்பது தவெகவின் மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கச் செய்யும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்
அதிமுகவில் இருந்த தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் ஆகிய 3 பேரும் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனையடுத்து, இன்று அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளார்.

திருமாவளவன் வேண்டுகோள்
இது குறித்து கேள்விக்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், "இது ஒரு ஆரோக்கியமான அரசியலாக விடுதலை சிறுத்தைகள் கருதவில்லை. குடியரசு தலைவர் ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்ற அடிப்படையில், இடதுசாரிகளுடன் இணைந்து இந்த ஆட்சி அமைய ஆதரவு வழங்கினோம்.

தவெக அமைச்சரவையில் இணைய வேண்டும் என விடுத்த அழைப்பை ஏற்று, நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து அமைச்சரவையில் இணையும் முடிவை எடுத்தோம்.
எந்த சூழ்நிலையிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையோடு நீங்கள் திறம்பட ஆட்சி செய்ய வேண்டும்.
தவெக தலைமை இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்க கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள். யார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும் அவர்களைக் கட்சியில் இணைத்துக்கொள்வது என்பது தவெகவின் மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கச் செய்யும்.
எனவே தவெக தலைமை இதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்" என தெரிவித்துள்ளார்.
புதிய தாக்குதலை தொடுத்தால் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை IBC Tamil