தங்கலானை பாராட்டாதது ஏன்? விசிக தலைவர் திருமாவளவன் அளித்த ‘நச்’ பதில்!
பா .ரஞ்சித் இயக்கிய தங்கலானை பாராட்டாதது ஏன் என்ற கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
திருமாவளவன்
2014ம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவதூறாகப் பேசியதாக உருளையன்பேட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது .
இந்த நிலையில் விசாரணையின் போது விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமலிருந்து வந்த நிலையில் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று (ஆக.30) ஆஜரானார்.
பா .ரஞ்சித்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,'' திமுகவில் அங்கம் வகிக்கும் விசிக கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. எங்கள் உரிமை தொடர்பாக எழுப்புகிற குரல் வேறு கூட்டணி தொடர்பான நிலைப்பாடு வேறு என திமுக கூட்டணி குறித்துக் கூறினார்.
தொடர்ந்து பா .ரஞ்சித் இயக்கிய தங்கலானை பாராட்டாதது ஏன்? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருமாவளவன் படத்தை பார்த்த பிறகுதானே பாராட்ட முடியும் என்று கூறினார்.
முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தைப் பார்த்த திருமாவளவன் மாரி செல்வராஜ் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துக் கூறியது குறிப்பிடத்தக்கது.