தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்திரம் வழங்க கூடாது - திருமாவளவன் பேச்சு
தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்திரம் வழங்க கூடாது என திருமாவளவன் பேசியுள்ளார்.
தூய்மை பணியாளர்கள் போரட்டம்
சென்னையில் தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் தூய்மை பணியாளர்கள் 2 வாரத்திற்கு மேலாக சென்னையில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவையடுத்து, காவல்துறையினர் போராடியவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்திர வழங்க கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியது கவனம் பெற்றுள்ளது.
பணி நிரந்தரம் சமூகநீதி இல்லை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 64வது பிறந்தநாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் நாம் திமுக அரசை எதிர்த்து போராடவில்லை என விமர்சிக்கிறார்கள்.
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது சமூக நீதி இல்லை. அவர்களை அந்த தொழிலில் இருந்தே நிரந்தரமாக மீட்பதே சமூக நீதி ஆகும்.
நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்புடையது அல்ல. அவர்களை அந்த தொழில் இருந்தே மீட்டெடுப்பதே எங்கள் போராட்டம் ஆகும். பணி நிரந்திர என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்னும் கோரிக்கை வலு சேர்ப்பதாக அமையும்" என பேசினார்.