வரக் கூடிய தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான் : அண்ணாமலை
2024 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சாக்கு போக்கு
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் அண்ணாமலை திருமாவளவன் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வருவதற்கான ஒரு காரணத்தை தேடுகிறார். கூட்டணியில் இருந்து வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வரலாம் சாக்குபோக்கு சொல்வது ஏன் என தெரியவில்லை என தெரிவித்திருந்தார்
இதனை தொடர்ந்து தற்போது திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி இடத்தில் அண்ணாமலை, திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார்; அவர் தைரியமாக வெளியே வரட்டும்.
திருமா கடினம்
2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான்; விசிக தலைவர் மாறி மாறி பேசி வருகிறார். கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது, பிற கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிடாது. விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.