திருவள்ளுவர் ஆன்மீகவாதி , பிரபஞ்சத்தின் விடிவெள்ளி : ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு
டெல்லி லோதி தோட்டத்தில் உள்ள டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
திருவள்ளுவர் பிரபஞ்சத்தின் விடிவெள்ளி
நமது வருங்கால தூண்களான மாணவர்களையும், அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அவர், திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி எனத் தெரிவித்த அவர், தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டதாகக் கருதுகிறேன்.

ஆனால் திருக்குறள் என்பது அதற்கு மேலானது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது எனத் தெரிவித்த அவர், தமிழ்நாடு ஆளுநராக நான் பதவியேற்ற பின்னர் எனக்குத் திருக்குறள் புத்தகம் அதிக அளவில் பரிசாகக் கிடைத்தது எனவும், அதில் பெரும்பாலானது ஜி.யு.போப் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு எனக் குறிப்பிட்டார்.
பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டது
ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டது எனக் குற்றச்சாட்டு தெரிவித்த அவர், அனைத்துக்கும் பொதுவாகிய ஆதிபகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர்,
பக்தி என்பதை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருக்குறளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan