இனி கோயில்களில் திருக்குறள் வகுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு
தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் பேசினார்.
அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழ் பரம்பரை கழகம் உருவாக்கப்படும் என கூறினார். பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என தெரிவித்தார். தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கூறினார்.
மேலும், கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும் என கூறினார்.
சிலம்பொலி சு.செல்லப்பன், தொ.பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கர வள்ளிநாயகம் மற்றும் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என தெரிவித்தார். உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழை கால நிவாரணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.