கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

Madurai
By Irumporai May 02, 2023 03:37 AM GMT
Report

மதுரை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

மீனாட்சி கல்யாணம் 

மதுரை மீனாட்சி கோவிலில் சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கி நாள் ஒர வைபோகம் என கோலாகலமாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இன்று மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் | Thirukalyana Vaipogam Imadurai Meenakshi Temple

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகமானது, இன்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற்றது, இந்த திருக்கல்யாணத்தை காண தமிழகம் முழுவதில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் | Thirukalyana Vaipogam Imadurai Meenakshi Temple

இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் , போக்குவரத்து ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பட்டர்கள் ,மீனாட்சி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்க திருமணம் இனிதே நடந்தது. இந்த திருமணத்தின் போது பெண்கள் மாங்கல்யம் மாற்றிக்கொண்டனர்.

நாளை வீதி உலா

நாளை திருக்கல்யாண கோலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதிஉலா வருவார்கள். அதற்கு அடுத்த நாள் மே 5ஆம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது .