தனுஷூக்கு இரண்டு காதலிகளா? - ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்
நடிகர் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் என தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாரடி நீ மோகனி, குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனிருத் இசையமைக்கிறார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கன்னா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர் என்று மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். அசுரன் படத்திற்குப் பின் தனுஷ் நடித்த எந்த படமும் ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை. குறிப்பாக கடைசியாக ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம், மாறன் ஆகிய படங்கள் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இதனிடையே திருச்சிற்றம்பலம் படம் ஜூலை மாதம் ரிலீஸாகும் என கூறப்படும் நிலையில் படத்தின் அப்டேட் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கதைப்படி தனுஷூக்கு 2 காதலிகளாம். இருவேறு காலக்கட்டத்தில் நடப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் நித்யா மேனனுடன் சேர்ந்து தனுஷ் டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil