தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?
நடிகர் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் உடன் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை படிக்காதவன் ,ஆடுகளம், மாப்பிள்ளை ஆகிய படங்களுக்குப் பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் இடம் பெற்றுள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதி வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவாகரத்திற்குப் பிறகு வரும் பிறந்தநாள் என்பதால் தனுஷை மகிழ்விக்க திருச்சிற்றம்பலம் ரிலீஸை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படமும் நெட்ஃப்ளிக்ஸில் வரும் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.