பறக்க பறக்க துடிக்குதே... தனுஷ் பாட்டுக்கு க்யூட்டா நடனமாடிய ஜப்பான் தம்பதி - வைரலாகும் வீடியோ

Dhanush Viral Video Japan Thiruchitrambalam
By Nandhini Sep 06, 2022 04:57 PM GMT
Report

ஜப்பானைச் சேர்ந்த ஒரு தம்பதி திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு க்யூட்டாக நடனமாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

திருச்சிற்றம்பலம் படம்

நடிகர் தனுஷ் மித்திரன் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியானது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் . 5 ஆண்டுகள் கழித்து இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘பறக்க.. பறக்க... துடிக்குதே...’ பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்ல... இப்பாடல் உலகளவில் செம்ம ஹிட்டடித்துள்ளது.

நடனமாடிய ஜப்பான் தம்பதி

இந்நிலையில், இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜப்பானைச் சேர்ந்த ஒரு தம்பதி இப்பாடலுக்கு க்யூட்டாக நடனமாடியுள்ளனர். தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

viral-video-japan-couple