‘தாய் கிழவி’ என்று அழைத்த ரசிகர்கள்; பட்டென பேசிய நடிகை நித்யாமேனன் - தீயாய் பரவும் தகவல்
நடிகை நித்யா மேனன்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், மிகவும் அழகான கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். இவர் '180' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, 'வெப்பம்', காஞ்சனா-2', 'ஓ காதல் கண்மணி', '24', 'இருமுகன்', 'மெர்சல்', 'சைக்கோ' உள்பட படங்களில் நடித்துள்ளார்.
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம்
தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, வசூல் சாதனையும் படைத்துள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் 5 ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வீல் சேரில் வந்த நித்யாமேனன்
சமீபத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ பட இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் அனிருத்தும், தனுஷ் வெள்ளை வேட்டி, சட்டையில் வந்திருந்தனர். இரண்டு பேரும் ஒரே மாதிரி உடை அணிந்து அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த நித்யாமேனனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், வீல் சேரில் அந்த விழாவுக்கு நித்யாமேனன் வந்தார். அப்போது, அந்நிகழ்ச்சியில் நித்யா மேனன் பேசுகையில், நீங்க இல்லாமல் எப்படி, வீல் சேரிலாவது வரவேண்டும் என்று தனுஷ் கூறியதால் வந்ததாக தெரிவித்தார்.
ப்ளீஸ் அப்படி கூப்பிடாதீங்க
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ‘தாய்கிழவி’ பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியான பிறகு நித்தியாமேனனின் புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். நித்யாமேனன் பல சேனல்களுக்கு தற்போது பேட்டி அளித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு சேனனில் பேட்டிக்காக நித்யா மேனன் நேரலையில் ரசிகர்களை சந்தித்தபோது, ரசிகர்கள் அனைவரும் அவரை ‘தாய்கிழவி’ என்று அழைத்துள்ளனர். அப்போது, ரசிகர்களிடையே நித்யா மேனன் என்னை ‘தாய் கிழவி’ என்று அழைக்காதீங்க என்று கேட்டுக் கொண்டார்.