திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் காட்சியை இணைந்து பார்த்த DnA : வைரலாகும் வீடியோ
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
திருச்சிற்றம்பலம்
இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தனுஷ் அனிருத்
DnA at #FansFortRohini celebrating #Thiruchitrambalam FDFS along with fans @dhanushkraja @anirudhofficial @sunpictures @RaashiiKhanna_ @priya_Bshankar @MenenNithya pic.twitter.com/sMpMg4etyI
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 18, 2022
இந்த நிலையில் இன்று திருச்சிறம்பலம் படமானது திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சியினை நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் ஒன்றாக வந்து பார்த்தனர்.
ரோகிணி தியேட்டரில் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து வந்து ரசிகர்களுடன் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து ரசித்துள்ளனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.