நேரலை: திருச்செந்தூரில் கோலாகலமான சூரசம்ஹாரம்...
முருகன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிமையான முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில் கந்தசஷ்டி விழா களைகட்டியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில், 6-ம் நாளான இன்று மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் நிகழும் முருகனி சூரசம்ஹாரம் உங்களுக்காக.. நேரலையில் இதோ..!