திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு முதல்வர் மரியாதை

cm ops eps
By Jon Feb 17, 2021 07:40 PM GMT
Report

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு முதல்வர் பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் புதல்வரும் தினத்தந்தி குழுமத்தின் அதிபருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருஉருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திருச்செந்தூரில் மகளிரணி குழு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அதற்கு முன்பாக தினத்தந்தி குழுமத்தின் அதிபரர் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Gallery